உலக மகளிர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிருக்காக இத்தினம் கொண்டாடப்படுவது பெருமைக்குரியதாகும்.  பெண்கள் என்று கூறும்போது அனைத்தும் அதில் அடங்கிவிடுகிறது.
ஒரு தாய்க்கு மகளாகவும், மாமியாருக்கு மருமகளாகவும், கணவருக்கு மனைவியாகவும், பிள்ளைக்கு தாயாகவும், பேரன் பேத்திகளுக்கு பாட்டியாகவும், சகோதரனுக்கு சகோதரியாகவும்…இவ்வாறாக இன்னும் உறவுமுறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எத்தளை முறைகளில் நம்மை அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பதில் பெண்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்தான் இருக்கும்.
பெண்கள் இந்த நூற்றாண்டில் எல்லா துறைகளிலும் சாதிக்கின்றார்கள். ஆட்டோ  ஓட்டுவதில் தொடங்கி சிறிய கடைகள் நடத்துதல், கப்பல் துறை, ராணுவம், மருத்துவம், கல்வி நிலையங்கள் என பல துறைகளில் பல பதவிகளில் இருப்பதை நாம் பார்க்கவும், படிக்கவும் செய்கிறோம்.
பல்லாண்டுகளாக பெண்கள் பல சேவைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். பெண்கள் தினம் என்றால் என் நினைவிற்கு வருவது டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியே. தொடர்ந்து வாசுகி, சாரதாதேவி, கஸ்தூரிபாய் காந்தி, விஜயலட்சுமி பண்டிட், அன்னை தெரசா, இந்திரா காந்தி, ஜெயலலிதா, கிரண்பேடி போன்றவர்களைப் பற்றி நாம் அறிவோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் நாட்டிற்காக பல நன்மைகளைச் செய்தவர்கள் ஆவர். நமக்கு முன்னோடியாக உள்ள இவர்களை நாம் பின்பற்றுகிறோமா என சிந்திக்க வேண்டும்.
இன்று பெற்றோர்கள், பிள்ளைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். மகளிரைப் பொறுத்தவரை பருவமடைந்தபின்னர் குணங்கள், செயல்கள், நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. டீன் ஏஜ் எனப்படுகின்ற காலகட்டத்தில் கொஞ்சம் கவனமாக அவர்களின் போக்கில் சென்று வளர்க்கவேண்டும். இந்த வயதில் வீட்டில் பெற்றோர் பல புத்திமதிகளைக் கூற ஆரம்பிக்கும்போது, அனைத்தையும் பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அச்சூழலில் பிள்ளைகள் தோழிகளுடன் கடைத்தெரு, சினிமா, கடற்கரை என்று போகின்றார்கள். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பகிர்ந்துகொள்வதில்லை. பெண் பிள்ளைகளிடம் பள்ளியில் நடப்பதை, கல்லூரியில் நடப்பதை, பணியாற்றும் இடத்தில் நடப்பதைத் தம்மிடம் பகிர்ந்துகொள்ள பெற்றோர் அறிவுறுத்தவேண்டும். அதனடிப்படையில் பெற்றோர் அவர்களிடம் எப்படிப்பழகவேண்டும் என்று எடுத்துக்கூறவும், வழிகாட்டவும், நல்ல பாதையில் செல்லவும் உதவும். அத்துடன் பல சிக்கல்களிலிருந்து அவர்களைக் காக்கவும் முடியும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பொதுச் செய்திகளைப் பேசி தம் திறமையை அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும்.
இப்பொழுதெல்லாம் குழந்தைகள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டது. இவற்றிற்கு நாமே காரணமாகிவிடுகிறோம். அவர்களுடன் பேசாதே, இவர்களுடன் பேசாதே என்று கூறுவதால் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் ஒருவித வெறுப்புணர்வு எண்ணம் தோன்ற ஆரம்பிக்கிறது.  அவர்களை இயல்பாக இருக்க நாம் கற்றுத் தருவது அவசியமாகும். ஆண் பிள்ளைகளுக்குக் கூடப் பொருந்தும்.
நற்செயல்களை கடைபிடிக்க ஆரம்பிக்க மகளிர் தினத்தில் உறுதி கொள்வோம்.  


Comments

  1. அவர்களை இயல்பாக இருக்க நாம் கற்றுத் தருவது அவசியமாகும். ஆண் பிள்ளைகளுக்குக் கூடப் பொருந்தும்.// அருமையான வரிகள். கூடவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துவிட்டால் போதும்

    இத்தினத்திற்கான நல்ல கருத்துகளுடன் கூடிய பதிவு

    மகளிர் தின வாழ்த்துகள்.

    கீதா

    ReplyDelete
  2. நல்ல பதிவு பெரியம்மா ��.

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    மகளிர் தன நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமை அம்மா...

    மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. மகள்களை வளர்ப்பதில் தாங்கள் சொல்லிய ஆலோசனைகள் இன்றைய சூழலில் பலருக்கும் பயனாகும் வழிமுறைகள்.

    இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

பாஸ்கர் அண்ணன்

பாவை விளக்கு : அகிலன்

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்