Posts

Showing posts from June, 2022

மச்சான் முருகேசபாண்டியன் (1943-2021)

Image
இன்று  (10 ஜூன் 2022) எங்கள் மச்சான் திரு . வி . முருகேசபாண்டியன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் . அருப்புக்கோட்டை அருகில் கல்லூரணியில் 3 மே 1943 இல் பிறந்தார் . அவருடைய பெற்றோர் திரு . சி . விநாயகமூர்த்தி - திரு . வி . சேர்மதி . அவர் உடன்பிறந்தவர் ஒரு தம்பி , திரு . வி . ரத்தினபாண்டியன் .   மச்சானின் ஏழாம் வயதில்   பெற்றோர் இறந்துவிட , தஞ்சாவூரில் தாய் மாமா திரு . மு . திருவண்ணாமலை நாடார் ( எங்கள் அப்பா ) வீட்டில் வளர்ந்தார் . தூய பேதுரு மேல்நிலைப்பள்ளியில் எஸ் . எஸ் . எல் . சி . முடித்தார் . 25 பேர் தேர்வு எழுதியதில் நான்கு பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் . அவர்களில் மச்சானும் ஒருவர் . தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட போதிலும் போதிய வசதி இல்லாததால் மேல் படிக்க முடியவில்லை . பிறகு தட்டச்சும் ,   சுருக்கெழுத்தும் கற்றார் . பூண்டியிலிருந்து வந்த கேசவமூர்த்தி என்பவர் எங்கள் அப்பாவிடம் தான் சிவகாசியில் ஒரு கல்லூரிக்கு வேலைக்குப் போவதாகக் கூறியபோது , எங்கள் அப்பா அவரிடம் “ அக்கா பையன் படித்துவிட்டு இருக்கிறான் . நீங்கள் போனதும் அங்கு வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்...