இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்
பெரிய கோயில் என்றாலே எனக்கு நினைவிற்கு வருவது திரு குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள் எழுதிய இராஜராஜேச்சரம் என்ற நூல் ஆகும். இந்நூலைப் படித்தால் கோயிலைப் பற்றி முழுமையாக அறியமுடியும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் குடமுழுக்கு 5 பிப்ரவரி 2020 நினைவாக இந்நூலில் படித்ததில் சிலவற்றைப் பகிர்கிறேன். சோழ நாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற ஒரு பரந்த நாட்டின் தலைநகரமாக விளங்கிய ஊரே தஞ்சையாகும். தண்+செய் என்பதே தஞ்சையாயிற்று….ஏறத்தாழ கி.பி.850இல் விஜயாலய சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று தஞ்சையைக் கைப்பற்றி சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். விஜயாலய சோழனில் தொடங்கி ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், மதுராந்தக உத்தமசோழன், இராஜராஜன், இராஜேந்திரன் (இவனது ஆட்சியின்முதல் 10 ஆண்டுகள்) ஆகிய பெருமன்னர்கள் காலம் வரை 176 ஆண்டுகள் தஞ்சை சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிற்று. (ப.15) திருக்கோயில் அமைப்பு : திருமதிலோடு இணைந்த திருச்சுற்று மாளிகை நாற்புறமும் சூழ்ந்து நிற்க நடுவே கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இராஜராஜேஸ்வரம் என்னும் பெருங்கோய