பட்டத்து யானை : வேல ராமமூர்த்தி
தமிழக வரலாற்றில் நடந்த பாஞ்சாலங்குறிச்சிப் போர் (செப்டம்பர் 1799), மதுரை திண்டுக்கல் கிளர்ச்சி (1800), சிவகங்கைப்போர் (1801), வேலூர்க்கோட்டைக் கிளர்ச்சி (1806), ராமன் நாயரது வயநாட்டுக் கிளர்ச்சி (1809), தளவாய் வேலுத்தம்பியின் திருவிதாங்கூர் கிளர்ச்சி (1809), சிப்பாய்ப் புரட்சி (1857), என விடுதலை வேண்டி வெகுண்டெழுந்த இயக்கங்களுக்கெல்லாம் வித்தூன்றிய கிளர்ச்சியான முதுகுளத்தூர் கிளர்ச்சி (1759) (நூலின் முன்னுரை) பற்றி இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்குப் பின்னர் மாவீரன் மயிலப்பன், பெருநாழி ரணசிங்கமாக மறு உருவெடுத்தான். வெள்ளையர்களின் ஆதிக்க வேரறுக்க ரணசிங்கம் ஆடிய ஆவேசத் தாண்டவமே பட்டத்து யானை என்கிறார் நூலாசிரியர். இந்நூலில் கமுதி, பெருநாழி, ஆப்பநாடு, ரெட்டியாப்பட்டி, முதுகுளத்தூர், எருமைக்குளம், பரளச்சி, சித்தரங்குடி போன்ற ஊர்களும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களும் இடம் பெற்றிருப்பதைக் கண்டேன். கதை நடக்கும் இடமாக அதிக எண்ணிக்கையில் ஊர்களைப் படித்தேன். இந்நூலில் வித்தியாசமாக நான் படித்தது கட்டுத்தாலி என்ற சடங்கு முறையாகும். இந்தச் சட...