Posts

Showing posts from May, 2017

திருநாலூர் மயானம்

Image
நாலூர் மயானம் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை 12 மே 2017 நாளிட்ட தினமணி இதழில் மோட்சமளிக்கும் மயானம் திருக்கோயில் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,  அவ்விதழுக்கு நன்றியுடன்.  திருநாலூர் மயானம் கோச்செங்கட்சோ ழனால் கட்டப்பட்ட மாடக் கோயிலாகும். காவிரியின் தென்கரையில்  96 ஆவது தலமாகப் போற்றப்படுகின்ற   இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் கும்பகோணம் -குடவாசல்  சாலையில்  திருச்சேறையை அடுத்து அமைந்துள்ளது.  இக்கோயில்  இருக்கும் ஊர் முன்பு சதுர்வே தி மங்கலம் என்றும், நால்வேதியூர்   என்றும் அழைக்கப்பட்டு பின்னர்  மருவி திருநாலூர் என்ற பெயரைப்  பெற்றது. நாலூர் மயானத்தைப் போல தமிழ்நாட்டில் மயானம் என்ற  பெயரில் உள்ள கோயில்கள்  கச்சி ம யானம், கடவூர் மயானம், காழி மயானம் என்பனவாகும். நாலூர் மயானம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ப...