Posts

Showing posts from May, 2016

குருக்கத்தி மாசி பெரியசாமி : தினமணி

Image
இன்றைய (6.5.2016) தினமணி, வெள்ளிமணியில் வந்துள்ள எனது கட்டுரையின் விரிவான வடிவம், அதிகமான புகைப்படங்களுடன். ( நன்றி : தினமணி) அமைவிடம் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் கிராமத்தில் குருக்கத்தி என்னும் ஊரில் மாசி பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. வெள்ளக்கோயில்-கரூர் சாலையில் 3 கிமீ தொலைவிலும்,  கரூர் -வெள்ளக்கோயில் சாலையில் 40 கிமீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது.  வரலாறு கொல்லிமலையிலுள்ள மாசி பெரியண்ணசாமியை பல இனத்தவர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவ்வாறாக மலையேறி செல்ல இயலாத நிலையில்  நாடார் இனத்தைச் சேர்ந்த குல பங்காளிகள் சிலர் ஒன்றுசேர்ந்து  கொல்லிமலையிலிருந்து பிடிமண்ணை எடுத்துவந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குருக்கத்தியில் வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியசாமி பல இடங்களில் வழிபடப்படுகிறார். குருக்கத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதப் பௌர்ணமியில் விழா நடத்தி வருகின்றார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச்சிறிய கோயிலாக சுற்றுச்சுவர் எதுவுமின்றி இக்கோயில் இருந்தது. திருப்ப